இந்தியா மாபெரும் சாதனை.!! குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்த இந்தியா.. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

By Raghupati R  |  First Published Sep 24, 2022, 10:41 PM IST

குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா சாதனை படைத்துள்ளது இந்தியா.


இந்திய மாதிரி பதிவு அமைப்பு ஆனது குழந்தைகள் இறப்பு விகிதம் பற்றி புள்ளிவிவர அறிக்கையைசமீபத்தில் வெளியிட்டது. அதில், குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளது.

வருகின்ற 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக, சென்ற 2014 ஆம் வருடம் முதல் குழந்தைகள் இறப்புவிகிதம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது.  இந்திய மாதிரி பதிவு 2020ன் படி, குழந்தை இறப்பு விகிதம் 2019ல் 30 ஆக இருந்த நிலையில், 2020 ஆம் வருடம் 2 புள்ளிகள் சரிந்து 28 ஆக பதிவாகி உள்ளது. மேலும் கிராமப்புற, நகர்புற குழந்தை இறப்பு வேறுபாடு 12 புள்ளிகளாக குறைந்து உள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..“தமிழக அரசுக்கு 2 நாள் கெடு.. எல்லாம் சரியா நடக்கணும் அப்படியில்ல.! திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை”

கடந்த 2020 ஆம் ஆண்டில் பாலின வேறுபாடு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை இறப்பு விகிதத்தில் நிலையான வளர்ச்சி கொள்கை (2030 க்குள் 12-க்கும் குறைவு) இலக்கை கேரளா, டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜம்மு, காஷ்மீர் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் தற்போதே எட்டிவிட்டது.  இந்த சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தற்போது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். https://t.co/8NMzzaqMCM

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

குழந்தை இறப்பை குறைப்பதற்கு அயராது உழைத்த அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய மாதிரி பதிவு 2020-ன் அறிக்கையின் படி, குழந்தை இறப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 

நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த தலைமையின் கீழ், மத்திய - மாநில அரசுகளின் சிறந்த நட்புறவு மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பால் 2030-க்குள் குழந்தை இறப்பை குறைப்பதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்ட இந்தியா தயாராக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..கணவருடன் முன்னாள் காதலியை சேர்த்து வைத்த மனைவி.. ஜில்லுனு ஒரு காதல் குந்தவியை மிஞ்சிய சம்பவம்!

click me!