”என் கையில் எதுவும் இல்லை; எம்.எல்.ஏக்கள் கோவமாக உள்ளனர்… அசோக் கெலாட் அதிரடி!!

By Narendran SFirst Published Sep 25, 2022, 11:56 PM IST
Highlights

​அசோக் கெலாடுக்கு  விசுவாசமான 90க்கும் மேற்பட்ட ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று இரவு ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால், அசோக் கெலாட் கட்சி தலைமையிடம் "தன் கையில் எதுவும் இல்லை என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அசோக் கெலாடுக்கு  விசுவாசமான 90க்கும் மேற்பட்ட ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று இரவு ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால், அசோக் கெலாட் கட்சி தலைமையிடம் "தன் கையில் எதுவும் இல்லை என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய தலைவர்களின் விருப்பமாக கருதப்படும் சச்சின் பைலட்டுக்கு பதிலாக அசோக் கெலாட் அல்லது அவரது தேர்வில் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என எம்எல்ஏக்கள் விரும்புகிறார்கள். ஆட்சி கவிழ்ந்தாலும் தாங்கள் கட்சியில் இருந்து விலகத் தயார் என சபாநாயகரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தலைமை வழக்கறிஞர் பதவி வேண்டாம்.. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அதிரடி !

மேலும் தலைமைக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபாலுடன் அசோக் கெலாட் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது என் கையில் எதுவும் இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கோபத்தில் உள்ளனர் என்று அசோக் கெலாட் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 71 வயதான அசோக் கெலாட், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் முதல் காந்தி அல்லாத தலைவர் பதவிக்கு தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முன்னணியில் உள்ளார். புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அக்டோபர் 17 தேர்தலில் அவர் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சசி தரூர் என்ற வேட்பாளர் ஏற்கனவே வேட்புமனுவைக் கேட்டு செயல்முறையைத் தொடங்கினார்.

இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு - தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு !

கெலாட் தனது ராஜஸ்தான் பதவியை விட்டுக்கொடுக்க தயங்கினார், குறிப்பாக சச்சின் பைலட், அவரது கிளர்ச்சியால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது அரசாங்கத்தை வீழ்த்தினார். கெலாட்டின் டீம் எம்.எல்.ஏக்கள் சச்சின் பைலட்டின் 2020 கிளர்ச்சியை எழுப்பி, அந்த நேரத்தில் அரசாங்கத்தை ஆதரித்த ஒருவராகத்தான் அடுத்த முதல்வர் இருக்க வேண்டும் என்றார்கள். இந்த நிலையில் தான் கெலாடுக்கு விசுவாசமான 90க்கும் மேற்பட்ட ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று இரவு ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால், அசோக் கெலாட் கட்சியின் மத்திய தலைமையிடம் என் கையில் எதுவும் இல்லை.. எம்.எல்.ஏக்கள் கோவத்தில் உள்ளனர் என்று கூறியதாக கூறப்படுகிறது. 

click me!