
நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்படும் என்றும், ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள்கள் கொடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும். அதேபோல் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும். நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. தகவல் தெரிவித்துள்ளது.
நடப்பு 2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்தான் நடத்தப்படும் எனவும் மாநில பாடத்திட்டம் சேர்க்கப்படவில்லை என சிபிஎஸ்இ கடந்த 22 ஆம் தேதிகளில் திட்டவட்டமாக அறிவிப்பு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.