
ஏழைகளுக்கு உரிய நேரத்தில் சட்ட உதவி கிடைப்பதில்லை என உச்சநீமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர்களுக்கு இணையான சட்ட தன்னார்வர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது :
ஏழைகளுக்கு உரிய நேரத்தில் சட்ட உதவிகள் கிடைப்பதில்லை.
சட்ட உதவி உரிய நேரத்தில் கிடைக்காததால் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை குறைகிறது.
இந்திய நீதித்துறையில், ஏழைகளும், கல்வியறிவு பெறாதவர்களும் தான் பிரதான கட்சிக்காரர்களாக உள்ளனர்.
ஏழைகளுக்கும் சட்ட உதவி கிடைப்பதில் சட்ட தன்னார்வர்களின் பங்கு பாராட்டுதலுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.