ஸ்காலர்ஷிப்  வாங்கும் மாணவரா நீங்கள் ? இனி ஆதார் அட்டை அவசியம்…

 
Published : Apr 29, 2017, 09:01 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
ஸ்காலர்ஷிப்  வாங்கும் மாணவரா நீங்கள் ? இனி ஆதார் அட்டை அவசியம்…

சுருக்கம்

Adar for scolorship

கல்வி உதவித் தொகை  பெறும் மாணவர்கள் தங்களது ஆதார் அட்டையை வரும் ஜுன் மாத இறுதிக்கும் சமர்பிபிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

கல்லூரிகளில் அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை பெற ஆதார் எண் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக மானிய குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்  கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு வகையான ஸ்காலர்ஷிப்களை பெற்று வருகின்றனர். தற்போது அதற்கான பதிவு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஸ்காலர்ஷிப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஆதார் எண் பெறாதோர், ஜூன் மாத இறுதிக்குள், தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை, அசாம், ஜம்மு , காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு பொருந்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!