சட்டக் கல்லூரித் தேர்வில் காதல் கடிதம் - வாய் விட்டு கதறிய கல்லூரி ஆசிரியர்கள்

 
Published : Apr 28, 2017, 06:05 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
சட்டக் கல்லூரித் தேர்வில் காதல் கடிதம் - வாய் விட்டு கதறிய கல்லூரி ஆசிரியர்கள்

சுருக்கம்

Bengal law students write love letters songs in exams

மேற்குவங்க சட்டக்கல்லூரி தேர்வில் காதல் கடிதங்களையும், திரைப்பட பாடல்களையும் எழுதிய மாணவர்கள் 2 வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் உள்ள பாலூர்காட் சட்டக் கல்லூரியில் அண்மையில்  4 ஆம் பருவத் தேர்வு நடைபெற்றது. மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 மாணவிகள் உள்பட 10 பேரின் விடைத்தாளை பார்த்த ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

சட்டம் மற்றும் அதன் பிரிவுகள் குறித்து விளக்க வேண்டிய மாணவர்கள் காதலிக்கு கடிதம் எழுதுவது போல பக்கம் பக்கமாக காதல் ரசம் சொட்டச் சொட்ட கடிதம் எழுதியிருந்தனர். சில மாணவிகளோ, தன் காதலன் என் பேச்சை கேட்க மறுக்கிறான், திட்டுகிறான் என சோகக் கதைகளை கவிதை வரிகளோடு சேர்த்து குமுறி இருந்தனர்.

சில மாணவர்கள் பிரபல பாலிவுட் பாடல்களை பரவசத்தோடு விளக்கியிருந்தனர். இவை அனைத்தையும் பார்த்து மயக்கநிலைக்கே சென்ற ஆசிரியர்கள் இப்பிரச்சனையை பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு  எடுத்துச் சென்றனர். நாளைய வழக்கறிஞர்கள் இப்படி பொறுப்பின்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் கோவமும் கொண்ட நிர்வாகம் அவர்கள் அனைவரையும் இரண்டு வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. 

PREV
click me!

Recommended Stories

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!
மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!