நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7830 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதுவமனை மற்றும் வீடுகளில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
கொரோனா பாதிப்பால் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மக்கள் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். சுமார் 2 வருட காலம் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கொரோனாவின் தீவிர பாதிப்பால் உறவினர்கள் நண்பர்களையும் இழந்து தவித்தனர். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். பள்ளிகளும் இயங்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 500க்கும் கீழ் கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் தனது கோர தாண்டவத்தை கொரோனா காட்ட தொடங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 7830 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும் வீடுகளில் என 40ஆயிரத்து 215 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முககவசம் கட்டாயமா.?
16 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 4292 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 401 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் 2301 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தாலும் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருந்த போதும் தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா கிளெஸ்டர் பாதிப்பாக ஏற்படவில்லையென்றும் தனி, தனியாகத்தான் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முககவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ஆன்லைன் சூதாட்ட தடை தாக்குபிடிக்குமா.? நீதிமன்றத்தை நோக்கி அம்புகளை ஏவும் ஆன்லைன் கேம் நிறுவனங்கள்