பீகாரின் அராரியாவில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் இந்த நடுக்கத்தை உறுதிப்படுத்தியது.
புதன்கிழமை அதிகாலை பீகாரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று அதிகாலை 5.35 மணி அளவில் பீகார் மாநிலம் அராரியாவில் 4.3 ரிக்டர் அளவு நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ., எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி பகுதியிலும் புதன்கிழமை அதிகாலை இதே போன்ற மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் சொல்கிறது.
சிலிகுரியில் இருந்து தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்திருக்கிறது.
இறந்தவரின் வங்கிக் கணக்கில் ரூ.28 லட்சம் அபேஸ்! வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீஸ்!