பீகாரின் மஞ்சி ரயில் நிலையத்தில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த மறந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள மஞ்சி நிறுத்தத்தில் உத்சர்க் எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் ரயிலை நிறுத்தாததால் நடைமேடையில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் புதன்கிழமை மாலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநர் தனது தவறை உணர்ந்ததும், மஞ்சி நிறுத்தத்தில் இருந்து அரை கிமீ தொலைவில் உள்ள பாலத்தில் ரயிலை நிறுத்தினார். ரயிலில் இருந்து பயணிகள் ஏறவோ, இறங்கவோ முடியாத சூழல் ஏற்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சப்ரா-பரூக்காபாத் உத்சர்க் எக்ஸ்பிரஸ் சாப்ரா சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு பயணத்தைத் தொடங்கியது. மற்றும் 7.26 மணிக்கு மாஞ்சி நிறுத்தத்தில் அந்த நிற்க வேண்டும். ஆனால். ரயிலின் டிரைவர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த மறந்துவிட்டார். இதனால் பயணிகள் குழப்பம் அடைந்ததால் ரயில் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ள பாலத்தில் ரயிலை அதன் ஓட்டுநர் நிறுத்தினார். பின்னர் உத்சர்க் எக்ஸ்பிரஸின் ஓட்டுநர், மஞ்சி நிறுத்தத்தின் ஸ்டேஷன் மாஸ்டரைத் தொடர்பு கொண்டு நடந்த தவறு குறித்து தகவல் தெரிவித்தார்.
மேலும் அந்த பாதையில் வரும் ரயில்களை நிறுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டர் மற்ற ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு தெரிவித்தார். உத்சர்க் எக்ஸ்பிரஸ் இறுதியாக பொறுமையாக ரிவர்ஸில் நகர்ந்து சென்று மஞ்சி ரயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் ஒருவழியாக பயணிகள் மஞ்சி ஸ்டேஷனில் இறங்கினர். அங்கிருந்து ரயிலில் ஏறுவோரும் ஏறினர் இதனால் அந்த ரயில் சுமார் 20 நிமிடம் தாமதமாக சென்றது.