இஸ்ரேல் போர் உலக அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், உலக நாடுகள் பல, அங்குள்ள தனது குடிமக்களை அவர்களது நாட்டுக்கு மீட்டு வருகின்றது. அந்த வகையில், இந்திய அரசும் அங்கு சிக்கியிருந்த 1000க்கும் அதிகமான இந்தியர்களை மீட்டு வருகின்றது.
இந்நிலையில் காசாவில் நான்கு இந்தியர்கள் உள்ளனர், தற்போது அவர்களை வெளியேற்றுவதற்கான சூழ்நிலை இல்லை, முதல் வாய்ப்பில் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் ஒன்றில் தெரிவித்துள்ளது. "காசாவின் தற்போது நிலைமை எந்த ஒரு வெளியேற்றத்திற்கும் கடினமாக உள்ளது, ஆனால் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் கூட, நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்" என்று MEA செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.
காசாவில், இந்தியர்கள் யாரும் கொல்லப்பட்டதாகவோ, காயம் அடைந்ததாகவோ தகவல் ஏதும் இல்லை என்றும், இஸ்ரேல் மீதான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறினார். தெற்கு இஸ்ரேலின் அஷ்கெலோனில் பராமரிப்பாளராக இருந்து வரும் இந்திய பெண்மணி ஒருவர், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்த போரில் காயமடைந்தார் என்றார் அவர்.
சப்பாத் மற்றும் யூத விடுமுறை நாளான அக்டோபர் 7 அன்று இஸ்ரேலை ஹமாஸ் ராக்கெட்டுகள் சரமாரியாக தாக்கியபோது அவர் தனது கணவருடன் வீடியோ அழைப்பில் இருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது, 500க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற காசாவில் உள்ள மருத்துவமனை மீது பயங்கரமான வான்வழித் தாக்குதல் குறித்து பேசியபொது திரு. பாச்சி இதை கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடந்த திங்கட்கிழமை இரவு காசா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை வளாகத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீனிய பிரதேச அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இஸ்ரேல் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை, இது ஹமாஸின் "Miss Fire" என்று கூறியுள்ளது.
இந்தியாவின் ஆபரேஷன் அஜய்யின் கீழ் ஐந்து விமானங்களில் 18 நேபாள குடிமக்கள் உட்பட, மொத்தம் 1,200 பேரை இஸ்ரேலில் இருந்து இந்தியா திருப்பி அழைத்துவரப்பட்டுள்ளனர். டெல்லி 2000 மற்றும் 2023க்கு இடையில் பாலஸ்தீனத்திற்கு கிட்டத்தட்ட 30 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸுடன் இணைந்து இருக்க முடியாது: இந்திய வம்சாவளி இஸ்ரேல் யூதர்!