இந்தியாவின் முதல் RRTS ரயில்.. "Namo Bharath" என்று அழைக்கப்படும் - கொடியசைத்து துவங்கி வைக்கும் பிரதமர் மோடி!

By Ansgar R  |  First Published Oct 19, 2023, 6:48 PM IST

Namo Bharath : அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பிறகு, இப்போது இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றையோ வெளியிட்டுள்ளது. RRTS ரயில்கள் இனி "நமோ பாரத்" ரயில்கள் என அழைக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.


RRTS எனப்படும் இந்த Regional Rapid Transit System ரயில் என்பது டெல்லி மற்றும் மீரட் இடையே நாட்டின் முதல் விரைவு போக்குவரத்து அமைப்பாகும், இது NCR (National Capital Region) முழுவதையும் இணைக்கும் ஒரு திட்டமாகும்.

அக்டோபர் 20 

Tap to resize

Latest Videos

இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பான இந்த RRTS ரயில்கள், நாளை 20 அக்டோபர் 2023 அன்று தொடங்கப்பட உள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடியசைத்து இந்த சேவைகளை துவங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில் இந்திய ரயில்வே இந்த ரயிலின் பெயரை 'நமோ பாரத்' என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான பாந்த்ரா மேம்பாலம்.. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் - இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ!

NCR முழுவதும் இணைக்கும் RRTS 

இந்த RRTS, அதாவது நமோ பாரத் ரயில், NCR எனப்படும் தேசிய தலைநகர் பகுதிகள் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் டெல்லி-காசியாபாத்-மீரட் RRTS வழித்தடத்தின் 17 கிமீ முன்னுரிமைப் பகுதி இப்போது திறக்கப்படும். இது காசியாபாத், குல்தார் மற்றும் துஹாய் நிலையங்கள் வழியாக சாஹிபாபாத்தை துஹாய் டிப்போவுடன் இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி-காசியாபாத்-மீரட் வழித்தடம் கடந்த 8 மார்ச் 2019 அன்று பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த டெல்லி-காசியாபாத்-மீரட் வழித்தடமானது சுமார் ரூ.30,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் டெல்லியில் இருந்து மீரட்டை இணைக்கும், காஜியாபாத், முராத்நகர் மற்றும் மோடிநகர் ஆகிய நகர்ப்புற மையங்கள் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பயணிக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிப்பு: இந்தியாவுக்கான கூகுளின் 5 திட்டங்கள்!

click me!