பரபரப்பான பாந்த்ரா மேம்பாலம்.. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் - இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ!

Ansgar R |  
Published : Oct 19, 2023, 06:21 PM IST
பரபரப்பான பாந்த்ரா மேம்பாலம்.. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் - இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ!

சுருக்கம்

மும்பையில் உள்ள மிகவும் பரபரப்பான பாந்த்ரா மேம்பாலத்தில், ஒரு அடையாளம் தெரியாத நபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் காட்டும் ஒரு அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை நகரம் எப்போது வேகமாக மற்றும் பரபரப்பாக இயங்கும் நகரங்களில் ஒன்று, இந்நிலையில் அங்கு மிகவும் பிரபலமான பாந்த்ரா மேம்பாலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மேம்பாலத்தில் ஒரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்த நபர் தனது கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்விட்டர் தளத்தில் வெளியான சில வீடியோகளில் அந்த நபர் பாந்த்ரா மேம்பாலத்தில் தூக்கில் தொங்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல ட்விட்டர் தளத்தில் வெளியான மற்றொரு வீடியோவில், போலீசார் இறந்த நபரின் உடலை அகற்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மும்பை போலீசார் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அந்த நபர் யார். பரபரப்பான ஒரு சாலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம் என்பது குறித்த விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார்.

மாவோயிஸ்ட்டுகள் ஒழிப்பு: முதன்முறையாக ஜார்கண்ட் காவல்துறையை பாராட்டிய மத்திய உள்துறை!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கோவா கிளப் தீ விபத்தில் முக்கிய நபர் கைது.. யார் காரணம்? ரகசியத்தை உடைத்த முதல்வர்
நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!