
இலங்கையில் நடைபெற்ற திருமணத்தில் மணமகள் அணிந்து வந்த 3.2 கி.மீ நீளமுள்ள சேலையை தரையில் விடாமல் பிடித்துக் கொள்ள 250 பள்ளி மாணவர்கள் பயன்படுத்தபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு திருமண விழா ஒன்று நடைபெற்றது. இதில், மாகாண முதல்வர் சரத் எக்நாயகா கலந்து கொண்டு மணமக்களை வாழ்ந்த்தினார்.
இந்த திருமணத்தில் மணப்பெண் அனைவரையும் கவரும் நோக்கத்தில் வித்தியாச முயற்சியாக 3.2 கி.மீ நீளமுள்ள சேலை அணிந்து முந்தாணை சாலையில் நடந்து வரும்போது கீழே விழாமல் இருக்க மாணவர்கள் 250 பேர் சாலையில் நின்று, அதனை கையில் பிடித்தவாறு நடந்து சென்றனர்.
நீளமான சேலை அணிந்து வந்த முதல்நபர் என்ற பெருமையை அந்த மணப்பெண் பெற்றார். ஆனால் அந்த பெருமை நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.
மேலும் 100 பள்ளி குழந்தைகள் திருமணத்தில் மற்ற வேலைகளை செய்தனர். பள்ளி குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட படம் டிவிக்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகியது.
இதனால் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து அந்நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.