பஞ்சாபில் மூத்த பத்திரிகையாளர் மர்ம மரணம்...! போலீஸ் விசாரணை

Asianet News Tamil  
Published : Sep 23, 2017, 03:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
பஞ்சாபில் மூத்த பத்திரிகையாளர் மர்ம மரணம்...! போலீஸ் விசாரணை

சுருக்கம்

Senior journalist in Punjab is mystery death ...! Police investigation

பஞ்சாபில் மூத்த பத்திரிகையாளர் கே.ஜே. சிங் மற்றும் அவரது தாயார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம், மொகாலியில் பத்திரிகையாளர் கே.ஜே. சிங் மற்றும் அவரது தாயார் குர்சரண் கவுர் (92), எஸ்.ஏ.எஸ். நகரில் வசித்து வந்தனர். 

மூத்த பத்திரிகையாளரான கே.ஜே. சிங், இன்று தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இவரின் தாயாரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு அருகில்  உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பத்திரிகையாளர் கே.ஜே.சிங் மற்றும் அவரது தாயார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களது வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளைப் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொள்ளைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சராக இருந்த சுக்பீர் சிங் பாதல், இந்த கொலை சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கான்ஃபிடன்ஸ் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் தற்கொ**லை.. துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!