
கிரண்பேடி, துணை நிலை ஆளுநர்போல் செயல்படவில்லை என்றும் இன்னும் தன்னை காவல்துறை அதிகாரிபோல் நினைத்து செயல்படுவதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் கடந்த பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது சரமாரியான விமர்சனங்களை முன் வைத்தார்.
அரசுக்கு களங்கம் விளைவிப்பதுதான் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் உள்நோக்கமாக உள்ளது என்றும் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்றும் நாராயணசாமி கூறினார்.
புதுவை அரசைக் குறைகூறுவதைத் தவிர வேறு எந்த செயலிலும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அது மட்டுமல்லாது கிரண்பேடி, துணை நிலை ஆளுநர்போல் செயல்படவில்லை என்றும் இன்னும் தன்னை காவல்துறை அதிகாரிபோல் நினைத்து செயல்படுவதாகவும் கூறினார்.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் தவறான உத்தரவுகளால் சென்டாக் அதிகாரிகளை செயல்படாமல் தடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.