மனைவியை வைத்து சூதாடி தோற்ற கணவன் - பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்மன்...

Asianet News Tamil  
Published : Jul 13, 2017, 06:25 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
மனைவியை வைத்து சூதாடி தோற்ற கணவன்  - பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்மன்...

சுருக்கம்

The incident happened in Madhya Pradesh where the husband allegedly raped her husband in the city of Indore.

பழங்கால மகாபாரதத்தில் ‘பாஞ்சாலி’யை வைத்து  சூதாடி பஞ்ச பாண்டவர்கள் தோற்ற கதை ேகட்டு இருக்கிறோம். அந்த கதையில்,பாஞ்சாலிக்கு பங்கம் ஏதும் ஏற்படவில்லை.

ஆனால், மத்தியப் பிரதேசம், இந்தூர் நகரில் கணவன் மனைவியை வைத்து சூதாடி தோற்றதால், அந்த பெண்ணை இருவர் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று முன்தின் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “ எனது கணவர் 2 பேருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம்  பணம் இல்லாததால் என்னை வைத்து சூதாடினார். அதில் அவர் தோற்கவே, அந்த 2 பேர் என்னை அவர்களுக்கு சொந்தம் என்று கூறி, என்ன பலாத்காரம் செய்தனர்’’ எனத் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துக்குபின் அந்த பெண் தனது கணவரிடம் இருந்து பிரிந்து இருக்கிறார். இருப்பினும் அந்த 2 பேர், தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்.

இது குறித்து இந்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தின் போலீஸ் அதிகாரி ஜோதிசர்மா கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தொடர்புடைய அனைவருக்கும் விசாரணைக்காக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இதுவரை எந்தவிதமான வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பீர் -ஒயின் பிரியர்களுக்கு ஜாக்பாட்..! இனி 90% வரை மலிவாக கிடைக்கும்..!
நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!