
நடிகர் கலாபவன் மணி, இறப்பில் நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக மலையாள திரைப்பட இயக்குநர் பைஜை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காமெடி ஹீரோவாக நடித்து குழந்தைகளையும் பெண்களையும் கவர்ந்தவர் நடிகர் திலீப். அவருக்கு இப்படி ஒரு கொடூர முகம் இருப்பதைக் கண்டு கேரள மக்கள் அதிர்ந்துபோயுள்ளனர். ஆமாம் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தான் அவரின் நிஜ முகம் தெரியவந்துள்ளது.
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலில் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் இரண்டாம் குற்றவாளியாக திலீப் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாவனா மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக அவரை பழிவாங்க திலீப் முடிவெடுத்தார்.
இது இரண்டாண்டு கால திட்டம் என்றும், பாவனா காரில் போகும்போது, அவரை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவில் பிடிக்க வேண்டும் என பல்சர் சுனி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திலீப் கைது செய்யப்பட்டதை அடுத்து, மலையாள திரைப்பட ஊழியர் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் கலாபவன் மணி, இறப்பில் நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக மலையாள திரைப்பட இயக்குநர் பைஜை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் பைஜை, கொச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது, மலையாள திரையுலகுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும் இருக்கும் தொடர்புகளை அம்பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.