
மக்களைச் சந்திக்கச் செல்லும் போது, தனக்கு பிரத்யேக ஏ.சி., சோபா, சிவப்பு கம்பள வரவேற்பு என எதுவும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மக்களைச் சந்திக்கச் செல்லும் இடங்களில் அதிகாரிள் எனக்கு அளிக்கும் அளவுக்கு அதிகமான வரவேற்பு என்னை வருத்தமடைச் செய்கிறது. ஆதலால், இனிமேல், மக்களைச் சந்திக்க செல்லும் நிகழ்ச்சிகளில் எனக்கு எந்தவிதமான வரவேற்பும் அளிக்க வேண்டாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதுபோன்ற வரவேற்பு மக்களுக்கு தொந்தரவுகளை உண்டாக்கும் என்பதால், அதை தவிர்த்து விடுங்கள் எனத் உத்தரவிட்டார்’’ எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் தியோரியா, கோரக்பூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் குடும்பத்தைச் சந்தித்து முதல்வர் ஆதித்யநாத் ஆறுதல் கூற சென்று இருந்தார். அந்த வீரர்களின் வீடுகளில் முதல்வர் வருகைக்காக சோபா, சிவப்பு கம்பளம், ஏசி. போன்றவற்றை அதிகாரிகள் செய்து இருந்தனர். முதல்வர் வந்து சென்ற சில நிமிடங்களில் அனைத்தும் அகற்றப்பட்டது.
இதைபோல, கடந்த ஜூன் 24-ந்தேதி கோரக்பூரைச் சேர்ந்த சி.ஆர்பி.எப். துணை ஆய்வாலர் சனாப் சுக்லா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவர் வீட்டுக்கு கடந் 8-ந்தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்று இருந்தார்.
அப்போது, உள்ளூர் நிர்வாகம் சாலை முழுவதும் சிவப்பு கம்பளம் விரித்தும், சாலையின் இருபுறங்களிலும் வௌ்ளை திரைச்சீலைகளை தொங்கவிட்டும், பக்கத்து வீடுகள் கூட தெரியாமல் மறைத்து இருந்தனர். உயிரிழந்த வீரரின் வீட்டில் காவி நிற திறச்சீலைகளை தொங்கவிட்டு இருந்தனர். மேலும், சோபா, ஏ.சி. ஆகிய வசதிகளும் செய்திருந்தனர். அவர் வந்த சென்ற சில நிமிடங்களில் வீட்டு உரிமையாளரைக் கேட்காமல் அனைத்தையும் அதிகாரிகள் அகற்றினர்.
இது ஊடகங்களில் வௌியாகி பெரும் சர்ச்சையானது, இதையடுத்து முதல்வர்ஆதித்யநாத் , அதிகாரிகளை கண்டித்து, இதுபோல் தேவையில்லாத வசதிகளை செய்யக்கூடாது எனக் கண்டித்துள்ளார்.