
மகாராஷ்டிராவில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாகக் கூறி மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடதுள்ளது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிலர் மாட்டுக்கறி கொண்டு சென்றதாகக் கூறி சிலரை தாக்கி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஜுனைத் ரயிலில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாகக் கூறி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மகாராஷ்ட்டி மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள பர்சிங்கி பகுதியில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாகக் கூறி மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதலில ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். ஆனாலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகின்றன.