"எண்ணுறோம்… எண்ணுறோம்… எண்ணிக்கிட்டே இருக்கோம்" - உர்ஜித் பட்டேல் புது விளக்கம்

 
Published : Jul 13, 2017, 09:25 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
"எண்ணுறோம்… எண்ணுறோம்… எண்ணிக்கிட்டே இருக்கோம்" - உர்ஜித் பட்டேல் புது விளக்கம்

சுருக்கம்

urjit patel explanation about money

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட வின் ப்புக்குனுப் பின்  ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ள பழைய  ரூபாய் நோட்டுக்களை இன்னும் எண்ணி முடிக்கவில்லை என்றும் தொடர்ந்து இரவு பகலாக விடுமறை கூட எடுக்காமல் ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து பொது மக்கள் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில் சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்  கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் இருவர் பணமதிப்பிழப்பிற்கு பின்பு எவ்வளவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வந்துள்ளன என நாடாளுமன்ற குழு சார்பில் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் , கடந்த நவம்பர் மாதத்தில்  மொத்தம் 17.7 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது என்றும்  தற்போது 15.4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். 

நேபாள் மற்றும் கூட்டுறவு  வங்கிகளில் இருந்து பழைய ரூபாய் நோட்டுக்கள் வரவேண்டியதுள்ளது என்றும் தபால் நிலையங்களில் பொதுமக்கள் மாற்றிய ரூபாய் நோட்டுக்கள் இன்னும் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
தற்போது வரை வந்துள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணியை சிறப்பு குழு தொடர்ந்து நடத்தி வருகிறது என்றும்  ஊழியர்கள் விடுமுறை கூட எடுக்காமல் இரவு பகலாக 24 மணி நேரமும்  எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உர்ஜித் பட்டேல் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

மாப்ள.. நான் வந்துட்டேன்! 12,800 கி.மீ. தாண்டி வந்து நண்பனை மிரள விட்ட NRI இளைஞர்!
வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!