இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே திருப்பதியில் வாடகை அறை… முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயம்...

 
Published : Jul 13, 2017, 05:47 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே திருப்பதியில் வாடகை அறை…  முன்பதிவுக்கும்  ஆதார் கட்டாயம்...

சுருக்கம்

adar card must for room reservation in thiruppathy

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வாடகை அறை தரப்படும் என்று திருப்பதி தேவாஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது மட்டுமல்லாமல் உலகின் பணக்கார கடவுளின் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்னோர் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

உலகின் அனைத்துப் பகுதியில் இருந்தும் வரும் பக்தர்கள் தங்குவதற்கு திருப்பதி திருமலையில் தேவதானம் சார்பில் அறைகள் கட்டப்பட்டு குறைந்த வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன.

.இந்த அறைகளை பதிவு செய்ய பக்கதர்கள் பல மணிநேரம் வரிசையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதைத்  தவிர்க்க புதிய வசதி ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதிப்படி , திருப்பதி தேவஸ்தானம் மத்திய விசாரணை அலுவலகத்தில் பத்து அறைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும்,  அறைகள் தேவைப்படுவோர் அங்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இப்படி முன்பதிவு செய்த பக்தர்கள் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை என்றும் அவர்களது மொபைல் எண்ணுக்கே எஸ்.எம்.எஸ் மூலமாக காலி அறை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் .இந்த முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட், தங்கும் அறை பதிவு செய்பவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!