அசைவ உணவுக்குத் தடை செய்த ஏர் இந்தியா! - செலவை குறைக்க  புது யுக்தி... 

 
Published : Jul 12, 2017, 08:57 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
அசைவ உணவுக்குத் தடை செய்த ஏர் இந்தியா! - செலவை குறைக்க  புது யுக்தி... 

சுருக்கம்

No non veg food for economy class passengers on Air India domestic flights

இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா, பெருத்த கடன் சுமையில் சிக்கியுள்ளது. கடனிலிருந்து மீளப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முதல் கட்டமாக செலவைக் குறைக்க அந்நிறுவனம் எடுத்துள்ள முடிவால் சர்ச்சையில் சிக்கியுள்ளது .

அதாவது குறைந்த தூரம் பயணம் மேற்கொள்ளும் விமானச் சேவைகளுக்கு அசைவ உணவை கடந்த வாரம் இந்நிறுவனம் ரத்து செய்தது. இதை அசைவ உணவு ரத்தால் செலவு குறையும் என தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்த நிறுவனம் கூறியுள்ளதாவது: "ஏர் இந்தியா நிறுவனம் அதிக கடனில் சிக்கியுள்ளது.  ரூ.550 பில்லியன் அளவுக்குக் கடன் 
தற்போது உள்ளது. 2015ஆம் ஆண்டு எடுத்த முடிவில் உள்நாட்டில் 90 நிமிடங்களுக்கும் குறைவான பயண சேவைகளுக்கு அசைவ உணவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட அளவு செலவைக் கட்டுப்படுத்த முடியும்"என்று தெரிவித்துள்ளது.

சேம்பிள் ரெஜிஸ்டிரேசன் சிஸ்டம் என்ற ஆய்வு நிறுவனம் 2014ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி "5 வயதுக்கு அதிகமான 71 சதவிகித பேர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள்" என்று கூறுகிறது.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!