
டெல்லியை தொடர்ந்து மும்பை புறநகர் பகுதியிலும் குடியிருப்பு பகுதியிலும் பட்டாசு விற்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியின்போது கணக்கற்ற அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் பயங்கர மாசு ஏற்படுகிறது என்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள தேசிய தலைநகர் பகுதிகளில் நவம்பர் 1ம் தேதி வரை தீபாவளி பட்டாசு விற்கவும், வெடிக்கவும் கூடாது என தடை விதித்தது.
டெல்லி காவல்துறை வியாபாரிகளுக்கு வழங்கிய பட்டாசு விற்பனை உரிமங்களை ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், அதை தொடர்ந்து, மும்பையிலும் புறநகர் பகுதியிலும் குடியிருப்பு பகுதியிலும் பட்டாசு விற்க தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.