
வைக்கம் ஆலப்பிரவேச வெற்றிக்கு பின் 81 ஆண்டுகள் கழித்து, கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்த கேரளாவைச் சேர்ந்த முதல் தலித் அர்ச்சகர் என்று யேடு கிருஷ்ணன் வரலாறு படைத்தார்.
திருவல்லா அருகே இருக்கும் மணப்புரம் சிவன் கோயில் கருவறைக்குள் சென்ற கிருஷ்ணன் மந்திரங்கள் ஓதி, தனது அர்ச்சகர் பணியை தொடங்கி புதிய அத்யாயத்தை பதிவு செய்தார்.
தலித் மக்கள் ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று வைக்கம் ஆலயப்பிரவேச போராட்டத்துக்கு கடந்த 1936ம் ஆண்டு நடந்த நவம்பர் 12-ந் தேதி வெற்றி கிடைத்தது. இப்போது 81 ஆண்டுகளுப் பின் கருவறைக்குள் தலித் ஒருவர் அர்ச்சராகநுழைந்துள்ளார்.
கேரளாவில் 1,248 கோயில்களை நிர்வகிக்கும் திருவிதாங்கூர்தேவஸ்தான வாரியம், சமீபத்தில் பிராமனர்கள் அல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமித்தது.
இதில் திருச்சூர் மாவட்டம், கொரட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.கே.ரவி , லீலா தம்பதியின் மகன் கிருஷ்ணன்(வயது22) அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக தந்திர சாஸ்திரத்தில் பயிற்சி பெற்று வருகிறார். அர்ச்சகர்களாக 6 தலித்கள் நியமிக்கப்பட்டதில், கிருஷ்ணனும் ஒருவர். இவர் தனது 15 வயதிலிருந்து தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோயிலில் பூஜைகள் செய்து வருகிறார்.
இந்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தான உத்தரவுப்படி, திருவல்லா அருகே இருக்கும் மணப்புரம் சிவன் கோயில்கிருஷ்ணன் அர்ச்சகராக பணி நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, நேற்று காலை கோயிலின் தந்திரி கே.கே.அனிருத்தன் தந்திரியிடம் ஆசி பெற்று, தலைமை அர்ச்சகர் கோபகுமார் நம்பூதரியின் முன்னிலையில் கிருஷ்ணன் வேத, மந்திரங்கள் ஓதி தனது அர்ச்சகர் பணியைத் தொடங்கினார்.