
பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய எரிசக்தி துறை சார்பில், டெல்லியில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் , உலகின் பல முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.அப்போது, இந்திய எரிசக்தி துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும், என்றும் ஒருங்கிணைந்த எரிசக்திக் கொள்கை, ஒப்பந்தங்கள், இயற்கை எரிபொருள் ஊக்குவிப்பு, எரிவாயு விநியோகத்தை மேம்படுத்துதல், குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.
பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் குறைப்பது குறித்து அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க இருப்பதாகவும், அவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.