
ஊழல் குற்றச்சாட்டு, முறைகேடு சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுக்கு பொறுப்பு ஏற்று எல்.கே.அத்வானி, பங்காரு லட்சமணி, நிதின் கட்கரி ஆகியோர் ராஜினாமா ெசய்ததைப்போல் பா.ஜனதா தேசியத் தலைவர் பதவியில் இருந்து அமித் ஷா ராஜினாமா செய்வாரா? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
4 வாரம் மூடல்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத் தலைவர் ஆனந்த் சர்மாநேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
அமித் ஷாவின் மகன் ஜெ ஷாவின் நிறுவனம் ரூபாய் நோட்டு தடைக்கு முன்பாக 4 வாரங்கள் மூடப்பட்டு இருந்த போது, எப்படி ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு விற்றுமுதலை உயர்ந்த முடிந்தது.
ஏன் விளக்கம்?
அமித் ஷா மகன் ஜெ ஷா ஒரு தனிநபர். அது தனியார் நிறுவனம். இந்த தனியா நிறுவனத்துக்காக, தனிமனிதருக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என் விளக்கம் கொடுத்தார் என்பதை விளக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காக்காமல், 2 பேர் கொண்ட ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து, முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
ராஜினாமா செய்வாரா?
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஜெயின் ஹவாலா டைரியில் தனது பெயர் எழுந்தபோது தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல பங்காரு லட்சுமண், நிதின்கட்காரி ஆகியோரும் தங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது தங்களின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த தலைவர்களின் பாதையை பின்பற்றி, பா.ஜனதா தேசியத் தலைவர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்வாரா?
விதிமீறல்
கலூப்பூர் கூட்டுறவு வங்கியில் ரூ.6.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அடமானமாக வைத்து ரூ.25 கோடி கடனை அமித்ஷா மகன் பெற்றுள்ளார். இது முற்றிலும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு முரணானது. ஏனென்றால், ரிசர்வ் வங்கி விதிப்படி, நாம் அடமானம் வைக்கும் சொத்து மதிப்பின் நான்கில் ஒரு பகுதிதான் கடன் கொடுக்க வேண்டும். அது மீறப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.
அடமானமாக ைவக்கப்பட்ட இரு சொத்துக்களில் ஒன்று அமித் ஷாவுடையது. மற்றொன்று போலி என்கவுன்டர் வழக்கில் அமித்ஷாவோடு குற்றம்சாட்டப்பட்ட அவரின் நண்பர் யாஷ்பால்சுதாசமாவின் சொத்தாகும்.
திறமைசாலி?
ஒரு ஆண்டில் அமித் ஷா மகன் ஜெ ஷா தனது நிறுவனத்தின் சொத்துக்களை 16 ஆயிரம் மடங்கு உயர்த்தியுள்ளார் என்றால் அவர் மிகவும் திறமைசாலிதான். தற்போது நாட்டில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு அவரின் திறமையையும், அனுபவத்தையும் கற்றுக்கொடுக்காலாமே.
இந்திய வரலாற்றிலேயே மிகக்குறுகிய காலத்தில் ஒரு நிறுவனம் இந்த அளவு மிக அதிகபட்சமான லாபம் அடைந்தது இதுதான் முதல் முறையாகும். எந்த மாதிரியான பொருட்களை விற்பனை செய்தார், எந்தெந்த நாடுகளுக்கு பொருட்களை அனுப்பி, அமித்ஷா மகன், இப்படி லாபம் ஈட்டினார் என்பதை அறிய மக்களுக்கு உரிமை இருக்கிறது.
மவுனம் ஏன்?
கடந்த 2015-6ம் ஆண்டில் கிடைத்த ரூ.80 கோடி விற்றுமுதலில் ரூ.51 கோடி ஏற்றுமதி மூலம் கிடைத்துள்ளதாம். பா.ஜனதா இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது, ஒரு சின்ன தவறுக்கும்கூட சம்பந்தப்பட்டவர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியது. இப்போது அந்த கட்சி அமைதியாக இருக்கிறது. வியாபம் ஊழல், சஹாரா டைரி, ஜார்கன்ட் முன்னாள் முதல்வர் ராமன் சிங் மகன், குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் மகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார்?
இவ்வாறு அவர் தெரிவித்தார்.