
இன்று 2வது நாளாக தொடரும் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியது.
ஜி.எஸ்.டி வரி, டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டணம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கம் சார்பில், நேற்றுமுதல் நாடு தழுவிய லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
இதனைதொடர்ந்து, 2வது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தொழில் நகரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் லாரிகளின் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த போராட்டத்தால், சரக்குகள் தேக்கமடைந்து 80 சதவீதத்திற்கும் மேலாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், மன்குர்ட் சோதனைச்சாவடியில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த முதல் நாள் போராட்டம் முழு வெற்றியடைந்து இருப்பதாக ஏ.ஐ.எம்.டி.சி. தெரிவித்து உள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தபோதும் , பொருட்களின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.