2,000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதிலாக மோடியின் படம்...!

Asianet News Tamil  
Published : Oct 09, 2017, 09:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
2,000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதிலாக மோடியின் படம்...!

சுருக்கம்

modi picture replacement of gandhi image in 2000 rupees note

2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவத்தில் அச்சிடப்பட்ட அழைப்பிதழில், மகாத்மா காந்திக்குப் பதிலாக பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் பொம்மனஹள்ளி தொகுதி பாஜக எம்எல்ஏ சதீஸ் ரெட்டி, தனது தொகுதியில் கட்டப்பட்டுள்ள பேட்மிண்டன் அரங்கத்தின் திறப்பு விழா அழைப்பிதழை 2000 ருபாய் நோட்டைப் போல் வடிவமைத்துள்ளார்.

அதில் காந்தியின் படத்திற்குப் பதிலாக மோடியின் படத்தை வைத்துள்ளார்.

முன்பக்கத்தில் மோடியின் படம், விழா நடைபெறும் இடம், நேரம் மற்றும் விருந்தினர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. பின்பக்கத்தில் பொம்மனஹள்ளி தொகுதியில் மேற்கொண்ட நலப்பணிதிட்டங்களும், மோடியின் திட்டங்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், அதில் தொடர்பு கொள்வதற்கான போன் எண்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வித்தியாசமான அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

குடியரசு தின விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த குடியரசு தலைவர்
விண்வெளி நாயகனுக்கு வீர விருது.. சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக் சக்ரா' விருது.. மத்திய அரசு கெளரவம்!