Covid Vaccine:இனி கொரோனா தடுப்பூசி கொள்முதல் இல்லை!ரூ.4 ஆயிரம் கோடியை திரும்ப ஒப்படைக்கிறது சுகாதாரத் துறை

By Pothy RajFirst Published Oct 17, 2022, 9:19 AM IST
Highlights

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயல்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இனிமேல் தடுப்பூசி கொள்முதல் இல்லை என முடிவு செய்துபட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் ரூ.4 ஆயிரத்து 237 கோடியை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயல்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இனிமேல் தடுப்பூசி கொள்முதல் இல்லை என முடிவு செய்துபட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் ரூ.4 ஆயிரத்து 237 கோடியை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

கவனத்திற்கு !! அக்டோபர் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளில் 13 வகை தடுப்பூசிகள்.. அமைச்சர் சொன்ன தகவல்

2022-3ம் ஆண்டு பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் 85 சதவீதம் இதற்காக செலவிடப்பட்ட நிலையில் மீதமுள்ள தொகை நிதிஅமைச்சகத்திடம் வழங்கப்படுகிறது
மத்திய அரசிடம் இன்னும் 1.80 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கைவசம் உள்ளன. இந்த தடுப்பூசி அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும். மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஆர்வம் குறைந்துவிட்டதாலும், கொரோனாவால் பாதிப்பும் குறைந்துவிட்டதையடுத்து இந்த முடிவை சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

ஒருவேளை அரசிடம் இருக்கும் கொரோனா தடுப்பூசி கையிருப்பு தீர்ந்துவிட்டால் சந்தையில் கொரோனா தடுப்பூசி கிடைக்குமா என்ற கேள்விக்கு மத்திய அரசு அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில் “ கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வது என்பது மத்திய அரசின் முடிவைப் பொறுத்தது. அதேசமயம், நாட்டில் நிலவும் சூழலைப் பொறுத்து அடுத்துவரும் பட்ஜெட்டில்கூட குறைந்தபட்ச தொகையைக் கூட தடுப்பூசி கொள்முதலுக்காக ஒதுக்கலாம். இது அனைத்தும் மத்திய அரசின் முடிவைப் பொறுத்து அமையும்” எனத் தெரிவித்தார்

மூக்கு வழியே செலுத்தப்படும் முதல் கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு ஒப்புதல் !

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக மக்களுக்குச் செலுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்தபோதிலும் கூட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 75 நாட்கள் கொரோனா தடுப்பூசி அம்ரித் மகோத்சவ் எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து, அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்கியது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் “ கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசியின் எக்ஸ்பயரி தேதி நெருங்கி வருகிறது. ஆதலால், இனிமேல் புதிதாக கொரோனா தடுப்பூசி வாங்கவில்லை என்ற முடிவை அமைச்சகம் எடுத்துள்ளது. ஆதலால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நடப்பு நிதியாண்டில் தடுப்பூசி கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.4,237.14 கோடியை மத்திய நிதிஅமைச்சகத்திடம் திரும்ப ஒப்படைக்க இருக்கிறது” எனத் தெரிவித்தார்

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சரிவராது! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்

ஒட்டுமொத்தமாக நாட்டில் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 219.32 கோடியாகும். அரசின் புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் வயதுவந்தோர் பிரிவில் 98 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திவிட்டனர், 92 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திவிட்டனர். 15 முதல் 18வயதுள்ளபிரிவினரில் 83.7 சதவீதம் பேர் முதல் டோஸையும், 72 சதவீதம் பேர் இரு டோஸ்களையும் செலுத்தியுள்ளனர். 12 முதல் 14 வயதுள்ள பிரிவில், 68.1 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 
 

click me!