பள்ளி வேனுக்குள் 11 அடி ராட்சத மலைப்பாம்பு.. அலறிய பொதுமக்கள்! பயந்த வனத்துறை

By Raghupati RFirst Published Oct 16, 2022, 9:27 PM IST
Highlights

பள்ளி பேருந்தில் பெரிய மலை பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி பேருந்துக்குள் ராட்சத மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ரியான் பப்ளிக் பள்ளியின் பேருந்தின் இருக்கைக்கு அடியில் மலைப்பாம்பு மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க..இந்தி பயிற்று மொழியா.? அமித்ஷா பதவி விலக வேண்டும்.. எச்சரித்த திருமாவளவன்

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்ட அலுவலர் நகர வந்தனா சிங் மற்றும் மாஜிஸ்திரேட் பல்லவி மிஸ்ரா ஆகியோர் வனத்துறை குழுவினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து மலைப்பாம்பை மீட்டனர். மலைப்பாம்பு வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், பள்ளி பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து அதிகாரி ஒருவர் மலைப்பாம்பை இழுப்பதைக் காணலாம். பிடிபட்ட மலைப்பாம்பின் எடை சுமார் 80 கிலோவும், நீளம் 11 அடி நீளமும் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மீட்புப் பணிக்குப் பிறகு மலைப்பாம்பு ஒருவழியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையும் படிங்க..பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

A python rescued from a school bus in Raibareli, UP. pic.twitter.com/1mP3EY9njc

— Piyush Rai (@Benarasiyaa)

நல்லவேளையாக ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இதுபற்றி கூறிய அரசு அதிகாரிகள், ஓட்டுநர் கிராமத்தில் பள்ளி பேருந்தானது  நிறுத்தப்பட்டது. பேருந்தின் அருகே சில ஆடுகள் ஓடிக்கொண்டிருந்தன என்றும்,  பாம்பை பார்த்த அப்பகுதி மக்கள் கத்த, அப்போது அந்த பாம்பு ஒளிந்துகொள்ள பஸ்சுக்குள் புகுந்தது என்று கூறினர்.

இதையும் படிங்க..கோவை தெற்கில் கமல்ஹாசனை தோற்கடித்து மாஸ் காட்டியவர் வானதி சீனிவாசன்.. பாஜக Vs மநீம மோதல் !

click me!