சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கை கவுரவச் சின்னம்: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் விளாசல்

By Pothy RajFirst Published Feb 4, 2023, 2:09 PM IST
Highlights

சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை கவுரவச் சின்னம் போல் மத்திய அரசு வெளிப்படுத்துவது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசை விளாசியுள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை கவுரவச் சின்னம் போல் மத்திய அரசு வெளிப்படுத்துவது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசை விளாசியுள்ளார்.

ஸ்மிருதி இரானி

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்து பேசுகையில் “ 2022-23ம் ஆண்டிலிருந்து சிறுபான்மையினருக்கா ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திருத்தப்பட்டு, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

ஒன்றாம் முதல் 8ம் வகுப்பு வரை கல்வி உரிமைச்ச ட்டத்தின் கீழ் கட்டாயக் கல்வ இருக்கிறது. மத்திய அரசின் மற்ற அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் ஒரே மாதிரியான கல்வி உதவித்தொகை திட்டங்களுடன் இத்திட்டத்தை ஒத்திசைவோடு கொண்டு செல்ல இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

மத்திய பட்ஜெட்-டில் சிறுபான்மை நலத்துறைக்கு 38% நிதி குறைப்பு: மதரஸாக்களுக்கு 93% குறைப்பு

ப.சிதம்பரம் ட்வீட்

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரின் இந்த பதிலுக்கு முன்னாள் மத்திய நிதிஅமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை மற்றும் சிறுபான்மை மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கல்விக் கடனுக்கான மானியம் ஆகியவற்றை ரத்து செய்து அதற்கு சாக்குபோக்கு கூறும் அரசாங்கத்தின் பதில் முற்றிலும் பகுத்தறிவற்றது மற்றும் தன்னிச்சையானது.

சில திட்டங்களை ஒன்றிணைக்கிறோம் என்பதை ஒப்புக்கொண்டாலும்,  சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் மானியம் மற்றொரு திட்டத்துடன் இணைக்கக்கூடிய திட்டங்களா
100நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிம் கிசான் திட்டத்தோடு நீட்டித்தார்கள், முதியோருக்கான ஓய்வூதியத் திட்டத்தை 100 நாட்கள் வேலைதிட்டத்தோடு நீட்டித்தார்கள்.

பிரதமர் மோடி-க்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பிரிவுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை எவ்வளவு?

எதிரான கொள்கை

ஒரு டஜனுக்கு மேல் இணைக்கப்பட்ட திட்டங்கள்உள்ளன. சிறுபான்மை மாணவர்களுக்கான திட்டங்களை வேறுஒருதிட்டத்தோடு இணைப்பது அவர்களின் வாழ்க்கையை மேலும் கடினமாக்கும்.
சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கை தங்களுக்கு கவுரமானது என்று மத்திய அரசு கருதினால் அதை வெளிப்படையாக காண்பிக்கட்டும். வெட்கேடானது.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்

நிதி குறைப்பு

சிறுபான்மை நலத்துறைக்கு 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட, 38% குறைக்கப்பட்டுள்ளது.  

சிறுபான்மைப் பிரிவினரைச் சேர்ந்த மாணவர்களுக்கான பல்வேறு உதவித்தொகைத் திட்டங்கள் மற்றும் திறன்மேம்பாட்டு திட்டங்களுக்கு பெருமளவு, தொழில்நுட்ப பாடப்பிரிவில் பயில்வோருக்கான நிதிஉதவிக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. 

பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

2022-23ம் ஆண்டு(நடப்புஆண்டு) பட்ஜெட்டில் சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.5,020.50 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், வரும் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3,097 கோடி மட்டுமே அதாவது 38சதவீதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதிலும் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டில் நடப்பு ஆண்டில் ரூ.2,612 கோடி மட்டும்தான்.

click me!