PM Modi visit Karnataka: கர்நாடகா செல்லும் பிரதமர் மோடி! புதிய பசுமைத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

By SG Balan  |  First Published Feb 4, 2023, 1:11 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 6) கர்நாடகா செல்லும் பிரதமர் மோடி பல்வேறு கலந்துகொண்டு பேச உள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 6ஆம் தேதி (திங்கட்கிழமை) கர்நாடக மாநிலத்துக்குச் செல்கிறார். தும்கூருவில் நடைபெறவுள்ள பங்கேற்கும் பிரதமர், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்துக்குச் செல்கிறார். திங்கள் காலை மாதவரா அருகிலுள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடக்கும் விழாவில் இந்திய எரிசக்தி வார (India Energy Week) நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைக்கிறார்.

Tap to resize

Latest Videos

6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் உலகெங்கிலும் இருந்து பல்வேறு நாடுகளின் 30 அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.  500 பேச்சாளர்கள், 1000 கண்காட்சியாளர்கள் என 30 ஆயிரம் பேர் இந்த விழாவின் பல்வேறு நிகழ்வுகளில் பங்பகு பெறுகிறார்கள். இதுபோன்ற விழா முதல் முறையாக இந்தியாவில் நடக்கிறது. இது போன்ற உயர்மட்ட எரிசக்தி நிறுவனங்களின் சிஇஓக்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த விழாவில் இந்தியாவின் எரிசக்தி ஆற்றலை மேம்படுத்துவது குறித்தும் அதில் உள்ள சவால்களை எதிர்கொள்வது பற்றியும் விவாதங்கள் நடைபெற உள்ளன. இதில், பிரதமர் மோடி சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் வட்டமேசை விவாதத்தில் பங்கேற்கப் போகிறார்.

SPG Commando:பிரதமர் மோடி-க்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பிரிவுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை எவ்வளவு?

பசுமை எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்குவதற்கான பசுமைப் போக்குவரத்துப் பேரணியை (Green Mobility Rally) கொடி அடைத்துத் தொடங்கி வைக்கிறார்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர், அந்நிறுவனத்தின் 2 கோடி பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து துணி தயாரிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைப்பார். E20 எரிபொருள் (E20 fuel) எனப்படும் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலையும் அறிமுகம் செய்துவைக்கிறார். பச்சை ஹைட்ரஜன் இயக்கம் பேரணியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

அன்றைய தினம் மதியம் தும்கூரு மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, பிதரஹள்ளி கிராமத்தில் உள்ள எச்.ஏ.எல். (HAL) தொழிற்சாலை வளாகத்தில் ஹெலிகாப்டர் தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்தே காணொலி காட்சி மூலம், சிக்கநாயக்கனஹள்ளி, திப்டூரில் நடக்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொள்கிறார். பின் அன்றே மீண்டும் டெல்லிக்குத் திரும்புகிறார்.

இந்திய நிறுவன கண் சொட்டு மருந்தால் தொற்று ஏற்பட்டு அமெரிக்கர் உயிரிழப்பு; 5 பேர் பார்வை இழந்ததாக குற்றச்சாட்டு

click me!