மத்திய பட்ஜெட்-டில் சிறுபான்மை நலத்துறைக்கு 38% நிதி குறைப்பு: மதரஸாக்களுக்கு 93% குறைப்பு

By Pothy Raj  |  First Published Feb 4, 2023, 1:21 PM IST

Budget 2023: minority schemes:சிறுபான்மை நலத்துறைக்கு 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட, 38% குறைக்கப்பட்டுள்ளது. 


சிறுபான்மை நலத்துறைக்கு 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட, 38% குறைக்கப்பட்டுள்ளது.  

சிறுபான்மைப் பிரிவினரைச் சேர்ந்த மாணவர்களுக்கான பல்வேறு உதவித்தொகைத் திட்டங்கள் மற்றும் திறன்மேம்பாட்டு திட்டங்களுக்கு பெருமளவு, தொழில்நுட்ப பாடப்பிரிவில் பயில்வோருக்கான நிதிஉதவிக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்தத் திட்டங்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.365 கோடி ஒதுக்கப்பட்டநிலையில், வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில்ரூ.44 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா செல்லும் பிரதமர் மோடி! புதிய பசுமைத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்து கடைசியாகத் தாக்கல் செய்த முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்ய முடியும்.

2022-23ம் ஆண்டு(நடப்புஆண்டு) பட்ஜெட்டில் சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.5,020.50 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், வரும் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3,097 கோடி மட்டுமே அதாவது 38சதவீதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

அதிலும் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டில் நடப்பு ஆண்டில் ரூ.2,612 கோடி மட்டும்தான்.
சிறுபான்மை மாணவர்களுக்கான ப்ரீமெட்ரிக் படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கான நிதி பட்ஜெட்டில் ரூ.900 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுபட்ஜெட்டில் கல்வி உதவித்தொகைக்காக ரூ.1,425 கோடி ஒதுக்கப்பட்டது

போஸ்ட்-மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கான நிதி ரூ.515 கோடியாக இருந்தநிலையில் பட்ஜெட்டில் ரூ.1065 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி-க்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பிரிவுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை எவ்வளவு?

சிறுபான்மை நலத்துறை சார்பில், சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, மாநில தேர்வாணையத் தேர்வில் தகுதி பெற்றால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும். ஆனால், இந்த நிதியாண்டில் அதற்குகூட நிதிஇல்லை. கடந்த ஆண்டு ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டது. இலவச பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்கு 60 சதவீதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 79 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் சிறுபான்மை கல்வி அதிகாரமளித்தலுக்காக ரூ.2,515 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் நிதி ரூ.1,689 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.சிறுபான்மைப் பிரிவினரின் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான நிதியும் ரூ.41 கோடியிலிருந்து ரூ.20 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக மதரஸாக்கள் மற்றும் சிறுபான்மையினர் கல்வித்திட்டங்களுக்கு அதிகமாக நிதி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுபட்ஜெட்டில் ரூ.160 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் 93% நிதி குறைத்து, ரூ.10 கோடி  மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை நிறுவன கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் பலி! நள்ளிரவில் சோதனை! உற்பத்தி நிறுத்தம்

சிறுபான்மை மக்கள் வாழும்பகுதியைக் கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், சமூகத்தில் சமநிலையற்ற தன்மையைக் குறைத்தல் ஆகியவற்றுக்காக மத்திய அரசு பிரதமர் ஜன் விகாஸ் கார்யகிராம் திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு கடந்தபட்ஜெட்டில் ரூ.1,650 கோடியாக இருந்தநிலையில் இந்த பட்ஜெட்டில் ரூ.600 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது

click me!