500 நாட்கள்; 25ஆயிரம் மொபைல் டவர்; ரூ.26,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரச ஒப்புதல்

By Pothy Raj  |  First Published Oct 4, 2022, 2:51 PM IST

அடுத்த 500 நாட்களில், 25ஆயிரம் மொபைல் டவர்களை அமைக்க, ரூ.26ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது.


அடுத்த 500 நாட்களில், 25ஆயிரம் மொபைல் டவர்களை அமைக்க, ரூ.26ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத்துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் “  யுனிவர்ஸல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் பண்ட் மூலம் நிதியுதவி இந்தத் திட்டத்துக்கு வழங்கப்படுகிறது,

Tap to resize

Latest Videos

பிரதமர் நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்களிடம் ‘ஒழுக்கச் சான்று’! யுடர்ன் அடித்த இமாச்சல் போலீஸார்

இந்த திட்டத்தை பாரத் பிராண்ட்பேண்ட் நெட்வொர்க் செய்கிறது.  மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் பங்கேற்ற டிஜிட்டல் இந்தியா மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலை தெரிவித்தார்

அஸ்வினி வைஷ்ணவ் தனது பேச்சின் இறுதியில், “ டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு தகவல்தொடர்பு இணைப்பு முக்கியமானது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும்தகவல் தொடர்பு சேவை இருக்க வேண்டும். அடுத்த 500 நாட்களில் 25ஆயிரம் மொபைல் டவர் அமைக்க, ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எனத் தெரிவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

புதிய நீதிபதிகள் நியமனம்: தலைமை நீதிபதி அனுப்பிய கடிதத்துக்கு கொலிஜியம் நீதிபதிகள் இருவர் எதிர்ப்பு

இந்த மாநாட்டில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் திறன்மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை இணைஅமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தொலைத்தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவ்சின் சவுகான், 12 மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், மத்தியப்பிரதேசம், குஜராத்,கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், தெலங்கானா, மிசோரம், சிக்கிம், புதுச்சேரி மாநிலஅமைச்சர்கல் பங்கேற்றனர்.

click me!