ஐயப்பன் கோயிலுக்கு அமைச்சருடன் சென்ற பெண்! இந்து அமைப்புகள் எதிர்ப்பு!

First Published Nov 20, 2017, 4:37 PM IST
Highlights
The girl who went to the Ayyappan temple with the minister


சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு கேரள அமைச்சர் சைலஜா சென்றிருந்ததார். அவருடன் 50 வயதுக்கும் உட்பட்ட பெண் ஒருவரும் சென்றிருந்தார்.

கேரளம் மாநிலம் பத்தணம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் 
அனுமதிக்கப்படுவதில்லை. இந்த மரபு நீண்டகாலமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து பெண்களும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்கலாம் என்ற நிலைப்பாட்டை கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய கம்யூனிஸ்ட் ஆட்சி எடுத்தது. ஐயப்பன் கோயிலில் அனைத்து பெண்களும் செல்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், கேரள அமைச்சர் சைலஜாவுடன் 50 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர் ஐயப்பன் கோயிலுக்கு சென்றது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து ஐக்கிய வேதி அமைப்பைச் சேர்ந்த ஒருவர், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. ஆனால் கேரள அரசோ அனுமதிக்க தொடங்கி இருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

click me!