
ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்திய மாணவியின் போட்டோவை மார்பிங் செய்து இந்தியாவை பற்றி தவறாக பொய் பிரசாரம் செய்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
கவல்பிரீத் கவுர் என்ற மாணவி டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு துணை நிற்பேன் என்ற வாசகம் தாங்கிய பாதகையை ஏந்தியவாறு ஜமா மசூதி முன்னர் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவாத கும்பல் தாக்குதலுக்கு எதிராக எழுதுவேன் எனவும் பாதகையில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு வெளியிட்ட புகைப்படத்தை பாகிஸ்தான் மார்பிங் செய்து இந்தியாவிற்கு எதிராக பொய்யாக பிரச்சாரம் செய்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் டுவிட்டர் மற்றம் பேஸ்புக் பக்கத்தில், இந்த போட்டோவை பதிவிட்டுள்ளது. அதில் அந்த பெண் கையில் ஏந்தியிருந்த பதாகையை மார்பிங் செய்து இந்தியாவை எனக்கு பிடிக்கவில்லை என்ற வாசகத்தை மாணவி கையில் ஏந்திருப்பது போல் வெளியிட்டது.
இதுகுறித்து ஜே.என்.யூ. மாணவ அமைப்பின் முன்னாள் துணை தலைவர் ராஷித் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்கை முடக்கியது.