Zika Virus: கர்நாடகாவில் முதல்முறையாக 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு: அறிகுறிகள் என்ன?

By Pothy RajFirst Published Dec 13, 2022, 9:01 AM IST
Highlights

கர்நாடக மாநிலத்தில் முதல்முறையாக ஜிகா வைரஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அ ரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்முறையாக ஜிகா வைரஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அ ரசு தெரிவித்துள்ளது.

ஜிகா வைரஸ் என்றால் என்ன

ஜிகா வைரஸ் கடந்த 1947ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜிகா வைரஸ் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம்மனிதர்களுக்கு பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அருணாச்சல் பிரதேச எல்லையில் இந்தியா-சீன வீரர்கள் மோதல்... இரு தரப்பு வீரர்களுக்கும் காயம் என தகவல்!!

இந்த ஏடிஸ் கொசுக்கள்தான் மனிதர்களுக்கு டெங்கு, சிக்கன்குன்யா, மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றை பரப்புகிறது. ரத்தப் பரிசோதனை மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எதிராக குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லே 

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கர்நாடகத்தில் முதல்முறையாக ஜிகா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சிறுமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட 3 மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதிகரிக்கும் குற்றங்கள்.. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா.. மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

அதில் 2 மாதிரிகள் நெகட்டிவ்வாகவும், ஒரு மாதிரி ஜிகா வைரஸ் இருப்பதாகவும் தெரியவந்தது.
அச்சம் அடையத் தேவையில்லை, அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. அந்த சிறுமிக்குத் தேவையான மருத்து சிகிச்சையும், தொடர் கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகத்தில் முதல் ஜிகா வைரஸ் தொற்று என்பதால், அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சுகாதாரத்துறை இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படும், அதற்குத் தயாராக இருக்கிறோம்.
கடந்த சில மாதங்களாக ஜிகா வைரஸ் கேரளா, மகாராஷ்டிரா, உ.பி. மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆதலால், அச்சமடைய வேண்டாம், ரெய்ச்சூர் மாவட்டம், அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், சுகாதாரப்பணிகளை விரைவாக செய்யவும் உத்தரவிட்டுள்ளோம். சூழலை உன்னிப்பாக அரசு கண்காணித்து வருவதால், விரைவில் இது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடும்” எனத் தெரிவித்தார்

மத்தியப் பல்கலைக்கழகங்களில் 11ஆயிரம் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலி: மத்திய அரசு தகவல்

அறிகுறிகள் என்ன

ஜிகா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால், உடலில் தடிப்புகள், அரிப்பு, காய்ச்சல், தசை மற்றும் எலும்பு மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஆனால், ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் பெரிதாகத் தெரிவதில்லை. இந்த அறிகுறிகள் 2 முதல் 7 நாட்கள்வரை இருக்கும்.

click me!