சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் தனிநபரின் தரவுகள் மோசமான முறையிலேயே கையாளப்படுகிறது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை பற்றி விரிவாக கூறிய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து தொழில்நுட்பங்களின் நுகர்வோர் என்ற முறையில் இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் பெருமளவுக்கு வளர்ந்துள்ளது.
820 மில்லியனுக்கும் அதிகமான இணையதள பயன்பாட்டாளர்களைக் கொண்ட இந்தியா, விரைவில் 1.2 பில்லியன் என்ற அளவை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிக அதிக அளவிலான இணையதள பயன்பாடு கொண்ட ஜனநாயக நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவைப் போல இணையதள பயன்பாடுகளுக்கு தணிக்கையோ, கட்டுப்பாடுகளோ இல்லாமல் இந்தியாவில் இணையதளம், அனைவரும் எளிதில் அணுகும் வகையில், இதர மேற்கத்திய ஜனநாயக நாடுகளுடன் டிஜிட்டல் கட்டமைப்பு இணைப்பை கொண்டுள்ளது.
இதையும் படிங்க.. 2023ல் பெரும் போர் மட்டுமா! இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !! நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !
தொழில்நுட்ப கொள்கை மற்றும் நிர்வாகம் தொடர்பான புதிய யுகத்தில் இந்தியா தனது ஆளுமையை நிரூபிக்க வழி ஏற்பட்டுள்ளது. ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு உலக கூட்டாண்மை கவுன்சிலிங் தலைமைப் பொறுப்பையும் அண்மையில் ஏற்றுள்ளது.ஆன்லைனில் நுகர்வோர் தரவு தவறாகப்பயன்படுத்துதல், பயனர்களுக்கு தீங்குவிளைவிக்கும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது.
மேலும், உலகெங் கிலும் உள்ள அரசுகள் வேகமாக அதிகரித்து வரும் சவால்களுக்கு விரைவாக தீர்வுகாணக் கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதில் பின்தங்கிவிட்டன. மாறிவரும் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப விரைவான அணுகுமுறையை கையாள முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. பெரிய தூண்டில் போட்ட ஓபிஎஸ்.. குஜராத் டூர் சக்சஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த ‘அந்த’ போட்டோ !
அதுமட்டுமின்றி, தனிநபர் பாதுகாப்பு உரிமை குறித்த தீர்ப்பு 2017-ல் வெளியானது முதல் நம்பிக்கை, வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை காணும் முயற்சிகள் தொடர்கின்றன. தரவு கொள்கைகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் ஒரு சட்டத்தை, புத்தாக்கத்திற்கு தடை ஏற்படுத்தாமல் வடிவமைக்கும் பயணத்தை அரசு மேற்கொண்டுள்ளது.
உலகத்தரத்துடன் கூடிய எதிர்காலத்திற்கு தயாரான சட்டங்களையும், விதிமுறைகளையும் கட்டமைக்க இணைய வழி பாதுகாப்பு திசையில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் செய்து, உத்தேச டிஜிட்டல் இந்தியா சட்டத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு இந்தியா மற்றும் உலகத்துக்கான எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்தை வகுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க.. 3 வருடங்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்படும் இளம் பெண்.. வேதனையில் கலெக்டருக்கு மனு !