அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் இடையே மோதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் இடையே மோதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9 ஆம் தேதி, இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியா மீது வெறுப்பை பரப்பும் பாக். OTT தளம்… அதிரடி நடவடிக்கை எடுத்த இந்திய அரசு!!
இதை அடுத்து இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அங்கு அமைதியான சூழல் திரும்பியது. இதனிடையே எல்லைப்பகுதியில் இருக்கும் சில பகுதிகளை இருநாட்டு வீரர்களும் தங்களுக்கு சொந்தம் என்று கூறி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் குற்றங்கள்.. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா.. மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
மேலும் இதன் காரணமாக இரு நாட்டு வீரர்களுக்கு மோதல் போக்கு இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட மோதலின் போது சீனா ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதிலும் எல்லையில் இரு நாட்டின் ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது ஏன் என்பது குறித்தும் என்ன நடந்தது என்பது குறித்தும் தகவல் ஏதும் வெளியாகவில்லை.