இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் ஆப்பிள் ஷோரூம்.. சீனாவுக்கு புதிய சிக்கல்..?

By Ramya sFirst Published Apr 21, 2023, 12:38 PM IST
Highlights

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி, சீனாவிலிருந்து பெரும் பகுதியை இழுக்கும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்..
 

கடந்த 18-ம் தேதி இந்தியாவில் முதல் ஆப்பிள் ஷோரூம் திறக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்த ஷோரூமை திறந்து வைத்தார்.. இதன் மூலம் சீனாவுக்கு பிறகு இரண்டாவது ஆப்பிள் ஷோரூம் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் வேகமாக முன்னேறும் என்று மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பிரபல ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்தியா ஒரு மாபெரும் நாடாக மாறி வருகிறது.. தொழில்நுட்ப உலகின் அனைத்து பெரிய தலைவர்களும் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்தியாவின் செயல்களால் ஈர்க்கப்பட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில வருடங்களில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியாவின் செயல்களை கண்டு நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறினார். ஆப்பிள் இந்தியாவில் தொடர்ந்து வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனம் - இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மூலம் முதலீடு, வேலைவாய்ப்பு ஆகியவை 3 மடங்கு அதிகரிக்கும்.. இந்திய சந்தையில் மட்டுமின்றி ஏற்றுமதியிலும் வேலைவாய்ப்புகள் 4 மடங்காக உயரும்.

எதிர்காலத்தில், மின்னணு உற்பத்தி துறையில் சீனா, இந்தியா மட்டும் இருக்காது.. ஆனால் சீனா மற்றும் இந்தியா மற்றும் வியட்நாம் மற்றும் நாம் அனைவரும் இன்று உலகம் கேட்கும் இந்த பன்முகப்படுத்தப்பட்ட, குறைவான செறிவூட்டப்பட்ட உலகளாவிய மதிப்பு சங்கிலியின் ஒரு பகுதியாக இருப்போம். கடந்த காலத்தில், இது சீனா என்ற ஒரே நாட்டைச் சுற்றியே இருந்தது.. ஆனால் கொரோனாவுக்கு பிந்தைய உலகம் மிகவும் நம்பகமான, பன்முகத்தன்மை வாய்ந்த, நெகிழ்ச்சித்தன்மையை விரும்புகிறது.. எனவே விநியோகச் சங்கிலியை மீண்டும் வளர்ப்பதில் இந்தியா நிச்சயமாக பங்கேற்க தயாராக உள்ளது. உலகத்திற்கே திறமை மையமாக இருக்கக்கூடிய ஒரு வரலாற்று தருணத்தில் இருக்கிறோம். இந்த திறமைப் புள்ளியில் சேர இளம் இந்தியாவை வடிவமைத்து உதவுவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். எனவே சீனாவை கவனிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் ஆப்பிள் ஐபோன்களில் ஆப்பிள் ஐபோன்களில் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அது கடந்த ஆண்டு 7 சதவீதமாக உயர்ந்தது. அந்நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் தைவான் நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் மூலம் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா போன்ற குளிர் பிரதேசங்களையும் சுட்டெரிக்கும் வெயில்... அதற்கான காரணங்கள் என்ன?
 

Latest Videos

click me!