
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் மாயமான நிலையில், இருவர் காயமடைந்தனர். காஷ்மீரின் கொக்கர்நாக் அடர்ந்த காடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு ராணுவமும் காவல்துறையும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து புதன்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில் இராணுவத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஒரு போலீஸ்காரர் உட்பட மூன்று அதிகாரிகள் அன்றைய நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பாதுகாப்புப் படைகள் புதிய தலைமுறை ஆயுதங்களையும், தாக்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் உள்ளிட்ட சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஜம்மு - காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ராணுவம் காவல்துறை கூட்டு நடவடிக்கை
செப்டம்பர் 12-ம் தேதி இரவு ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கின. அவர்கள் கரோல் கிராமத்தில் சில பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விரிவான தேடுதலில், அடர்ந்த வனப்பகுதியின் உயரமான பகுதிகளில் பயங்கரவாதிகள் மறைவிடத்தில் இருப்பது தெரிய வந்தது.
இந்த தேடுதல் வேட்டைக்கு தலைமை தாங்கிய கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோன்சாக் உள்ளிட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் காடுகளின் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாக சென்றார். நண்பகலில், பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் அதற்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கர்னல் சிங், மேஜர் தோஞ்சக் மற்றும் டிஎஸ்பி ஹிமான்யுன் பட் ஆகியோர் கடுமையான என்கவுண்டரின் போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகினர், பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்தனர்..
கர்னல் மன்பிரீத் சிங், 19 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் (19 RR) கமாண்டிங் அதிகாரியாக இருந்தார் மற்றும் மேஜர் ஆஷிஷ் தோஞ்சக், சேனா பதக்கம் வென்ற வென்ற அமைப்பான (கேலண்ட்ரி) 19 RR இன் நிறுவனத் தளபதியாக இருந்தார். ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளராக (DySP) பணியாற்றியவர் ஆவர்.
இந்த நிலையில் ராணுவ அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மன்ப்ரீதி சிங்கிற்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினார். அதிகாரிகளின் உடல்களை மீட்க கோகர்நாக் பகுதியில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களது உடல்கள் சிறப்பு விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.