ECI: Remote Voting Machine: வருகிறது ரிமோட் மின்னணு வாக்கு எந்திரம் ! தேர்தல் ஆணையம் அறிமுகம்

By Pothy RajFirst Published Dec 29, 2022, 5:01 PM IST
Highlights

உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கும் தொழிலாளர்கள் வசதிக்காக, ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு(RMV) எந்திரத்தை, தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கும் தொழிலாளர்கள் வசதிக்காக, ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு(RMV) எந்திரத்தை, தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

இந்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்விளக்கம் 2023, ஜனவரி 16ம் தேதி காண்பிக்கப்படுகிறது. ஆதலால், அரசியல் கட்சிகள்அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ஒரு டீ, 2 சமோசாவுக்கு இவ்வளவு விலையா! அநியாயம் பண்றீங்களேப்பா!

ரிமோட் மூலம் இயங்கும் வாக்குப்பதிவு எந்திரத்தை உருவாக்கியுள்ள தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் கருத்துக்கள், தொழில்நுட்ப சவால்கள், சட்டப்பூர்வசிக்கல்கள், நிர்வாக சவால்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்க கூட்டத்தைக் கூட்டியுள்ளது. 

பொதுத்துறை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ரிமோட் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம், ஒரு அறையில் அமர்ந்து கொண்டு 72 தொகுதிகளின் வாக்குப்பதிவையும் கையாள முடியும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் மாநிலத்தேர்தலில் வாக்களிக்க சொந்தஊருக்கு வரத் தேவையில்லை. 

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில் “ இளைஞர்கள்நலன், நகர்ப்புறங்களின் சூழல் ஆகியவற்றைப் பார்த்தபின்புதான் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் திட்டம் வந்தது. இந்த ரிமோட் வாக்கு எந்திரத்தின் மூலம் ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க முடியும். தொழில்நுட்பரீதியாக நாம் கண்டுபிடிக்கும் தீர்வு அனைவராலும் ஏற்கக்கூடியதாக, நம்பகத்தன்மைமிக்கதாக, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

கொந்தளிப்பான பேச்சு! பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் மீது கர்நாடக போலீஸார் எப்ஐஆர் பதிவு!

இந்த திட்டம் நடைமுறைக்குவந்தால், சமூகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இந்த ரிமோட் வாக்கு எந்திரம் குறித்து செயல்விளக்கம் அளிக்கவும், ஆலோசிக்கவும், 8 தேசியக் கட்சிகள், 57 மாநிலக் கட்சிகளை கலந்தாய்வுக்கு 2023,ஜனவரி 16ம்தேதிக்கு அழைத்துள்ளோம். இந்த வாக்கு எந்திரத்தின் தொழில்நுட்பக் குழுவினரும் இதில் பங்கேற்பார்கள். இந்த எந்திரம் குறித்த தங்கள் கருத்துக்களை, செய்ய வேண்டிய மாற்றங்களை, சந்தேகங்களை அரசியல் கட்சிகள் ஜனவரி 31ம் தேதிக்குள் தெரிவிக்கவேண்டும்.

வாக்களிப்பில் ரகசியத்தன்மை காத்தல், வாக்கு மைய ஏஜென்ட்களுக்கான வசதிகள், ஆகியவை உறுதி செய்யப்படும். கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகளே பதிவானது. 30 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. 

பேசும் தமிழுக்கு ரூ.74 கோடி! பேசாத சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி ஒதுக்கிய மத்திய அரசு

ஒருவாக்காளர் தனது சொந்தஊரில் தனது வாக்காளர் பெயரை சேர்க்காமல் விடுபட்டதற்கு பலகாரணங்கள் உள்ளன, அதனால் வாக்களிக்கும் உரிமையை இழக்கநேரிடும். ஒரு இடம்விட்டு மற்றொரு இடத்துக்கு  பிழைப்பு தேடிச் செல்லும்போதுகூட வாக்களிக்கும் உரிமையை இழக்கலாம். இந்தத் திட்டம் அமலுக்குவந்தால் யார் எங்குவேண்டுமானாலும் இருந்து வாக்களிக்கலாம். ” எனத் தெரிவித்துள்ளார்.

click me!