
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்பது தான் காதலித்தவர்களையே கரம் பிடிப்பதாகும். ஆனால், அந்த மகிழ்ச்சி உருவான சில நிமிடங்களிலேயே கருகிவிட்டால் எப்படி இருக்கும்?இப்படி ஒரு நெஞ்சை கரையவைக்கும் சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை, அமெரிக்காவின்ஹார்ட்போர்ட் மாநிலத்தில் உள்ள கனெக்ட்கட் நகரில் நடந்துள்ளது. காதலின் வலியை உணர நாடு, இனம், மொழி தேவைதானா?மரணப்படுகையில் ஆசையுடன் நேசித்த காதலனை ஆனந்த கண்ணீருடன் கரம்பிடித்த இளம்பெண், திருமணம உறுதி ஏற்பு முடிந்த சில நிமிடங்களில் மரணத்தை தழுவிய உருகக்கமான சம்பவம் நடந்துள்ளது.கனெக்ட்கட் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஹீதர் மோஷர்(வயது31). இவர் மனநிலை மருத்துவராக பணியாற்றி வந்தார். அதே நகரைச் சேர்ந்தவர் டேவிட் மோஷர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டு நட்பு மலர்ந்தது. ஸ்விங் டான்சிங் நடனம் பயிலும்போது இருவரும் சந்தித்தனர். இந்த நட்பு இருவர் மனதிலும் காதலாக மெல்ல அரும்பத் தொடங்கினாலும், ஒருவொருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 23 ந்தேதி ஹீதர் மோஷர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், மிகக் கொடிய மார்கப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர். மார்கப் புற்றுநோயில் பல வகை இருந்தபோதிலும், ஹீதர் மோஷர் ‘டிரிப்பில் நெகட்டிவ்’ என்ற பிரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். ஆனால், தான் மனதார காதலித்த காதலிக்கு புற்றுநோய் வந்துவிட்டது என்றதும் தனது காதலை டேவிட் மோஷர் மூடி மறைக்கவில்லை. மாறாக, ஹீதர் மோஷருக்கு புற்றுநோய் உறுதியான அன்றே ஹீதரிடம் கூறி தனது உண்மைக் காதலை கூறி உணர்த்தினார். கடந்த ஒரு ஆண்டாக ஹீதர் மோஷருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேதான் இருந்தது.
ஹீதர் மோஷருக்கோ தனது காதலனை கரம்பிடித்து வாழ வேண்டும் என்று தீரா ஆசையோடு விதியோடு போராடினார். ஆனால், ஹீதர் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, கடந்த மாதம் 30ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்தனர்.
ஆனால், அதற்குள் ‘காலன்’ ஹீதரை விட்டு வைக்கவில்லை. ஹீதர் மோஷர் உடல் நிலை மோசமடைந்தது. இதனால், திருமணத்தை டிசம்பர் 22ந் தேதியே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றநிலையே திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதன்படி, கனெக்ட்கட் நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனையில், உறவினர்கள், நண்பர்கள், மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் ஹீதர் மோஷரை, டேவிட் மோஷர்திருமணத்துக்கு ஆயத்தமாகினர்.
பாரம்பரிய கிறிஸ்துவ மணமகள் ஆடையுடன், மூக்கில் ஆக்சிஜன் குழாயுடன், முகத்தில் புன்னகையுடன், உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் ஹீதர் மோஷர் தனது காதலர் டேவிட்மோஷருருக்கு மோதிரம் மாற்றினார். கேக்வெட்டி இருவரும் இனிப்புகளை ஒருவொருக்குஒருவர் பரிமாறினர்.
ஆனால், இந்த மகிழ்ச்சி அடுத்த சில நிமிடங்களில் கருகப்போகிறது என்று ஹீதர் மோஷருக்கு அப்போது தெரியவில்லை. தனது ஆருயிர் காதல் டேவிட்டுடன், திருமண உறுதிமொழி ஏற்ற சில நிமிடங்களில் இந்த உலகைவிட்டு ஹீதர் பிரிந்தார்.
இதைப் பார்த்த டேவிட் மோஷர் கண்ணீர்விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
இது குறித்து டேவிட் மோஷர் கூறுகையில், “ நாங்கள் இருவரும் திருமணம் ெசய்வோம் என யாரும் நினைக்கவில்லை. ஆனால், என்னை திருமணம் செய்து அனைவரின் கணிப்புகளையும்ஹீதர் மாற்றிவிட்டார். என் காதலின் மொத்தவடிவம் ஹீதர். அவளை நான் இழந்துவிட்டேன்’’ எனத் தெரிவித்தார்.
ஹீதர் மோஷரின் திருமணப்புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது.