குளிர் இனி எப்படி இருக்கும்? ...இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

First Published Jan 6, 2018, 10:33 PM IST
Highlights
Heavy fog in north India


கடும் பனி மூட்டத்தால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ரெயில் மற்றும் குளிர் இனி எப்படி இருக்கும்? ...இந்திய வானிலை மையம் எச்சரிக்கைமான சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், வட இந்தியாவில் வெப்ப நிலை மிகவும் குறைந்து குளிர் மேலும் அதிகரிக்கும் என, இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் அதிகாலை வேளைகளில் அதிக அளவு பனி மூட்டம் காணப்படுகிறது.

தொடர்ந்து பாதிப்பு

கடந்த சில வாரங்களாக, நிலவி வரும் அடர் பனிமூட்டத்தால் ெரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

நேற்றும் இதே நிலை நீடித்த நிலையில், ெரயில் மற்றும் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.

எச்சரிக்கை

இதற்கிடையில், ‘‘இமாசலப் பிரதேசத்தில் பெய்துள்ள பனிப் பொழிவால், வட இந்தியாவில் வெப்பநிலை மிகவும் குறையும்'’ என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

குளிர் அலை

‘‘தற்போது இமாசல பிரதேசத்தில், பொதுவாக இருப்பதைவிட 1 முதல் 2 டிகிரி வரை வெப்பநிலை குறைவாக இருக்கிறது. இது, வரும் நாள்களில் இன்னும் குறைய அதிக வாய்ப்புள்ளது. இமாசலப் பிரதேசத்தில் தற்போது பொழிந்துள்ள புதிய பனிப்பொழிவால், குளிர் அலை மிகவும் அடர்த்தியாகியுள்ளது'’ என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

ரெயில்கள் ரத்து

குளிர் அலைக்குப் பின்னர், வட இந்தியாவில் பல ெரயில்கள் ரத்துசெய்யப்பட்டன. இதனால், ஏராளமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கடைசி இரண்டு நாள்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக பல ெரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெப்பநிலை மேலும் குறைய உள்ளதால், வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியசாக உள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லியில் 49 ெரயில்கள் தாமதமாகவும், 13 ெரயில்கள் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டது. 18 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பனி மூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்கள் அனைத்தும் மெதுவாக சென்றதை பார்க்க முடிந்தது.

click me!