
அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நலத்திட்ட தவிகள் மற்றும் மானியங்களைப்பெற கேஸ் இணைப்பு, ரேஷன் அட்டை ள்ளிட்டவற்றில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று வங்கிக் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க தேவை இல்லை எனவும் தேவை எனவும் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வந்தன.
இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.