பெற்ற குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற கொடூர தாய்! குழந்தை தன் சாயலில் இல்லாததுதான் காரணமாம்!

Asianet News Tamil  
Published : Dec 10, 2017, 03:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:34 AM IST
பெற்ற குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற கொடூர தாய்! குழந்தை தன் சாயலில் இல்லாததுதான் காரணமாம்!

சுருக்கம்

The cruel mother who killed the child

குழந்தை தனது சாயலில் இல்லை என்பதாலும், தனது நிறத்தில் இல்லை என்பதாலும் 8 நாட்களே ஆன குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம்ட, மாநிலம் காசியாபாத் பாட்லா நகரை சேர்ந்தவர் ஆர்த்தி (22). இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற கோபத்திலும் மன வெறுப்பிலும் ஆர்த்தி இருந்து வந்தார். இதற்கு காரணம், அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தை வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி, குழந்தையை தலையணையால் தாக்கி கொலை செய்தார். இதன் பின்னர், குழந்தையை வாஷிங் மெஷினுக்குள் மூடி வைத்துவிட்டார். குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் ஆர்த்தி போலீசில் புகார் கூறியிருந்தார். ஆனால் போலீஸ் விசாரணையில் குழந்தையை கொண்டதை ஆர்ததி ஒப்புக் கொண்டார்.

குழந்தையைக் கொன்று வாஷிங் மெஷினுக்குள் வைத்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே கேரளாவில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை, தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே, கட்டப்பனாவில் பின்னு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே 9 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சந்தியாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

திடீரென குழந்தை அசைவற்று இருந்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் கணவர், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் கழுத்தில் கீரல்கள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகமே, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளது.

பின்னர், அங்கு வந்த போலீசார், குழந்தையின் தாய் சந்தியாவிடம் விசாரித்துள்ளனர். விசாரணையின்போது குழந்தை தனது நிறத்தில் இல்லை என்பதாலும், தனது சாயலில் குழந்தை இல்லை என்பதாலும், கழுத்தை நெரித்துக் கொன்றதாக சந்தியா போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சந்தியாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..! புதிய அரசால் ரத்தக் களறியாக மாறிய போராட்டம்..!
நாங்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டோமா?.. சபாநாயகர் புகாரால் கொந்தளித்த ஜோதிமணி.. பரபரப்பு விளக்கம்!