குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த உலகின் மூத்த வாக்காளர்...!

Asianet News Tamil  
Published : Dec 10, 2017, 12:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த உலகின் மூத்த வாக்காளர்...!

சுருக்கம்

126-year-old girl who voted for Gujarat elections

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 126 வயது மூதாட்டி ஒருவர் வாக்களித்தார். அவர் வாக்களிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

குஜராத் மாநில சட்டப்பேரவை முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், இரண்டாம் கட்டமாக வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில், 68 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இந்த தேர்தலில் 126 வயது மூதாட்டி ஒருவர் வாக்களித்தார். குஜராத்தில் மிகவும் வயது மூத்த பெண்மணியான இவர், நேற்று வாக்களித்தார். ராஜ்கோட் மாவட்டத்தின் உப்லெடா என்ற நகரைச் சேர்ந்தவர் இவர். இவரின் பெயர் சந்திரவைத்யா அஜிபென். இவருக்கு 6 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். வயது
முதிர்ந்தாலும், இன்னும் இவர் ஆரோக்கியமாகவே இருக்கிறார். கைத்தடியைக்கூட இவர் பயன்படுத்துவதில்லை. அதேபோல் கண்ணாடியும் அணிவதில்லை. 

எந்தவொரு பெரிய நோயும் அவருக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. வாக்குச் சாவடிக்கு வந்த சந்திரவைத்யா அஜிபென், வரிசையில் நிற்க முடியாது என்பதால், அவருக்கு சிறப்பு ஏற்பாடு செய்து வாக்களித்தார். குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் 100 வயதுக்கும் மேற்பட்ட 372 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..! புதிய அரசால் ரத்தக் களறியாக மாறிய போராட்டம்..!
நாங்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டோமா?.. சபாநாயகர் புகாரால் கொந்தளித்த ஜோதிமணி.. பரபரப்பு விளக்கம்!