
உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தனர். 25க்கும் அதிகமான வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சகரன்பூரை அடுத்த ஷிம்லானா கிராமத்தில் மன்னர் மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தாக்கூர் சமுதாயத்தினர் இசைப்பேரணி நடத்தினர். பல்வேறு கிராமங்கள் வழியாகச் சென்ற இப்பேரணி ஷபீர்பூரைச் சென்றடைந்தது.
அப்போது அப்பகுதி மக்கள் பேரணிக்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.
அப்போது தகராறு முற்றியதில் இரு தரப்பினரும் கற்கள், செங்கற்களைக் கொண்டு தாக்கிக்கொண்டனர்.
இதில் தாக்கூர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.