2016ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த, மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
2016ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த, மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தது. இதன்படி, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்து. இதற்கு பதிலாக புதிய ரூ.2000, ரூ.500, ரூ.100 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். தங்கள் பணத்தையே வங்கியிலிருந்து எடுக்க முடியாமலும், ஏடிஎம்களில் இருந்து எடுக்க முடியாமல் கடும் வேதனை அடைந்தனர். ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் பணம் எடுக்க வரிசையில் நின்ற பலர் உயிரிழந்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளிடம் இருந்து கள்ளநோட்டு ஒழிக்கப்படும், தீவிரவாதம் ஒழிக்கப்படும், கள்ளநோட்டுகள் வங்கிக்குள் வந்துவிடும் என்று மத்திய அரசு கூறியது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்பட்டதா என்று விசாரிக்க உத்தரவிடக்கோரி 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையில்,நீதிபதிகள் பிஆர் காவே, ஏஎஸ் போண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி “ பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தன்னிச்சையாகக் கொண்டுவருவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி நன்கு ஆலோசித்தபின்புதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவருவதற்கு முன்பு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தீவிரமாக கலந்தாய்வு செய்துள்ளன. இந்த நடவடிக்கையை கொண்டுவருவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. பணமதிப்பு நீக்கம் விகிதாச்சாரக் கோட்பாட்டால் பாதிக்கப்படவில்லை என்று நாங்கள் நம்புகிறோம்
ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு 52 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது நியாயமற்று அல்ல. ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு நன்கு கலந்தாய்வு செய்துள்ளது.இந்த நடவடிக்கையை எடுக்கும் முன் 6 மாதங்கள் வரை மத்திய அரசுஆலோசனை நடத்தியுள்ளது.” எனத் தீர்ப்பில் தெரிவித்தனர்.
பணமதிப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது.
ஆனால், இதில்அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றிருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி பிவி நாகரத்னா பெரும்பான்மை நீதிபதிகள் கருத்தில் இருந்து மாறுபட்டு தீர்ப்பை வழங்கினார். அவர் அளித்த தீர்ப்பில் “ பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டு நிறைவேற்றி இருக்க வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாகச் செய்திருக்கக்கூடாது”எனத் தெரிவித்தார்