12 கி.மீ. காரில் இழுத்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு; சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!

By Narendran SFirst Published Jan 2, 2023, 12:18 AM IST
Highlights

டெல்லியில் இளம்பெண் ஒருவர் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. 

டெல்லியில் 23 வயது இளம்பெண் ஒருவர் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்து இருக்கும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோவில், மாருதி சுஸுகி பலேனோ கார் ஒன்று  உயரமான டிவைடர் உள்ள சாலையில் ஓட்டிச் செல்லப்படுவதைக் காணலாம்.

இதையும் படிங்க: பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி! நிதிஷ்குமார் போட்ட மாஸ்டர் பிளான்.. 2024 ஆட்டம் ஆரம்பம்

23 வயதான அஞ்சலி என்ற பெண் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டாரா என்பது காட்சிகளில் இருந்து தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், காரின் கீழ் ஒரு மங்கலான வடிவத்தைக் காணலாம். 

இதையும் படிங்க: சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் உயிரிழப்பு... உடலை மீட்டு தர கோரிய அவரது குடும்பத்தார்!!

புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை) அந்தப் பெண் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் கார் மீது மோதியது. காரில் ஸ்கூட்டர் சிக்கியதாக தெரிகிறது. இதையடுத்து, வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பெண் டெல்லி, சுல்தான்புரியிலிருந்து கன்ஜவாலா வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு காரால் இழுத்துச் செல்லப்பட்டார்.

அன்று அதிகாலை 3:30 மணியளவில் ரோஹினி மாவட்டத்தில் உள்ள கன்ஜவால் காவல்துறைக்கு வந்த தொலைபேசியில், குதுப்கர் நோக்கிச் செல்லும் சாம்பல் நிற பலேனோ கார் ஒரு பெண்ணின் உடலை இழுத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் தகவல் கொடுத்தவர், காரின் பதிவு எண்ணையும் காவல்துறைக்கு வழங்கினார். இதையடுத்து அனைத்து சோதனை சாவடிகளிலும் செல்லும் கார்களை நிறுத்தி சோதனையிடுமாறு டிராபிக் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதிகாலை 4 மணியளவில், கஞ்சவாலா காவல்துறைக்கு மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பெண்ணின் நிர்வாண உடல் சாலையில் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். குற்றம் நடந்த இடத்தில் இருந்து மாதிரிகள் மற்றும் பொருட்களை சேகரித்தனர். பின்னர் அங்கு தடயவியல் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். உடல் மங்கோல்புரியில் உள்ள எஸ்ஜிஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், டில்லி போலீசார் காரை துப்பு துலக்கி விசாரணை நடத்தினர். காரின் உரிமையாளரை கண்டுபிடித்து 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தீபக் கண்ணா (26), அமித் கண்ணா (25), கிரிஷன் (27), மிதுன் (26), மனோஜ் மிட்டல் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காரை பறிமுதல் செய்த போலீசார், இவர்கள்  குடிபோதையில் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!